நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி மலை ரயில் சேவை  ரத்து

தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறைகள் 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை வரும் மலை ரயில் , உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் தண்டவாளத்தில் சீரமைப்பு பணி பெற்று வருவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story