நீலகிரி : மலர் கண்காட்சி மே 17ல் துவக்கம்

நீலகிரி : மலர் கண்காட்சி மே 17ல் துவக்கம்

ஆட்சியர் அருணா

உலக புகழ் பெற்ற மலர் கண்காட்சி இந்தாண்டு மே 17ம் தேதி துவங்கவுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

கோடை விழா குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறியதாவது, 126 வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ல் துவங்கி 22ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக் கண்காட்சி மே 24ல் துவங்கி 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகளின் தேதி பிறகு அறிவிக்கப்படும்.

மேலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் இந்த ஆண்டு முறையாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகங்கள் அமைக்கப்படும். மேலும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை பொருள் கண்காட்சி ஆகிய கோடை விழாக்களின் தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story