செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதியவில்லை -அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதியவில்லை -அமலாக்கத்துறை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதியவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவிற்கு, அமலாக்கத் துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டுமென்ற செந்தில் பாலாஜி கோரிக்கை நிரகரிக்கப்பட்டுள்ளது. வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணையை நாளை மறு தினத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி அல்லி.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23வது முறையாக நீட்டிப்பு செய்து மார்ச் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story