இனி இவர்களுக்கும் கட்டண சலுகையா!
பேருந்தில் கட்டணம் சலுகை
ஐந்து வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு தற்போது பேருந்தில் கட்டணம் செய்ய முழு சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
வயதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நடத்துனருக்கு தக்க சான்றிதழையோ, அடையாள அட்டையையோ காண்பித்து உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தியும் நடத்துனர்கள் அதனை ஏற்காமல் விவாதம் செய்தாலோ அல்லது கட்டணம் வசூலித்தாலோ புகாரின் பேரில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் நடத்துனர்களின் மீது புகார் அளிக்க போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Next Story