சென்னையில் 30 ஆம் தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை: மாநகராட்சி

சென்னையில் 30 ஆம் தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை: மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

சென்னையில் 30-ந்தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை என மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சாலைகள் வெட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் வழித்தட சாலைகள் மட்டுமின்றி உள்புற சாலைகளும் வெட்டப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வேளச்சேரியில் சாலை துண்டிப்பு மற்றும் மெதுவாக சீரமைப்பு பணி நடைபெறுவதாக புகார்கள் வந்தன. தி.நகர் பகுதியிலும் சாலை சீரமைப்பு பணிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தன. அடையாறு கழிவுநீர் மற்றும் குடிநீர் கொண்டு செல்லும் பாதையில் பல இடங்களில் சாலை வெட்டப்பட்டதால் மோசமான நிலை அங்கு ஏற்பட்டது. தண்டையார்பேட்டையில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெறுவதாக தெருக்கள் மோசமான நிலையில் உள்ளன. மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் சாலைகள் வெட்டப்பட்டு சீரமைக்க கால தாமதம் ஆகிறது. முகப்பேர், திருவொற்றியூரிலும் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு பணிகள் நடப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோடம்பாக்கத்தில் மந்தமான சீரமைப்பு பணிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பருவமழை தொடங்க உள்ள நிலையில் அடிக்கடி சாலைகளை தோண்டுவதால் கடும் சிரமம் ஏற்படும் என்று பொதுமக்கள் பயப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் 30-ந்தேதி முதல் புதிய சாலைகள் வெட்டுவதை நிறுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. புதிதாக சாலைகள் வெட்ட அனுமதிக்கப்படமாட்டாது என்றார்.

Tags

Next Story