திராவிட இயக்கத்தை அழிக்க யாராலும் முடியாது - வைகோ
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவு கேட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது பேசிய வைகோ, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வட இந்தியாவில் அமோக வரவேற்பும், மரியாதையும் இருப்பது அவருக்கு கிடைத்த மரியாதை அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த மரியாதை. தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண்திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், பல ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு மூலம் பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியாளராக உள்ளார். பிரதமர் மோடி திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கிறார். அது முடியாத காரியம், எத்தனையோ பேர் இதுபோல திராவிட இயக்கத்தை அழிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்கள். யாராலும் முடியவில்லை. அது மோடியாலும் முடியாது காரணம் இது பலருடைய ரத்தத்தினாலும் கண்ணீரிலும் உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழுக்காக தங்களது இன்னுயிர் நீத்தவர்கள் வாழ்ந்த மண் பெரம்பலூர் மண்ணாக்கும் எனவே நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியின் போது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா,அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.