நீர்நிலை புறம்போக்கு இடங்களில் அனுமதி இல்லை : அமைச்சர்
நிகழ்ச்சியில் பேசும் அமைச்சர்
நீர்நிலை புறம்போக்கு இடங்களில் கட்டிடம் கட்ட யாரும் அனுமதி வாங்கமுடியாது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அரசின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழக வீட்டுவசதித்துறை , மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பங கேற்றார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் , சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரத்தில் அரசுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை என்றார்.
மழையினால் மதுபாட்டில்கள் சேதம் குறித்து கணக்கெடுக்கவில்லை என்றும் , பொதுமக்களின் பிரச்சினை தான் முதன்மை என்பதால் அதனை கவனித்து கொண்டிருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி் , நீர்நிலையாக இருந்திருந்தால் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி இருக்க மாட்டார்கள். நீர்நிலை புறம்போக்காக இருந்தால் யாரும் அனுமதி வாங்கமுடியாது என்றார்
Tags
Next Story