இபிஎஸ் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பதில் இல்லை - எஸ்.பி வேலுமணி

எதிர்கட்சி தலைவர் எழுப்பிய எந்த கேள்விக்கும் சட்டமன்றத்தில் பதில் இல்லை. எடப்பாடியார் ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அதிமுக தரப்பில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் திமுக பொறுப்பு எடுத்து பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில் பேசிய, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் போது, எதிர்கட்சி தலைவர் எழுப்பிய எந்த கேள்விக்கும் சட்டமன்றத்தில் பதில் இல்லை. எடப்பாடியார் ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மின் துறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சியில் கஞ்சா எங்கும் எளிதாக கிடைக்கிறது. அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை என போலியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஊடகங்கள் திமுக ஆட்சியை தூக்கி பிடிப்பதை நிறுத்த வேண்டும். பல வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள் அதிமுக தொண்டர்கள், எனவே 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாக உள்ளது. என்றார்.

Tags

Next Story