காய்கறி விற்று அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

காய்கறி விற்று அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ காய்கறி கடையில் காய்கறி விற்று வாக்கு சேகரித்தார்.

வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று 14 ஆவது நாளாக நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணா சிலை பாலாஜி நகர் 1வது குறுக்கு தெரு முதல் 9வது குறுக்கு தெரு வரை, திருப்பதி நகர், திருப்பதி நகர் 1வது குறுக்கு தெரு முதல் 6வது குறுக்கு தெரு வரை, விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ண நகர் வளர்மதி நகர், சாரதாம்பாள் தெரு, பாலகுமரன் நகர், அம்பேத்கர் நகர், பாலாஜி விஸ்தரிப்பு குடிசை பகுதி, ஸ்ரீநகர் காலனி அனைத்து தெருக்கள், யுனைடெட் காலனி, இரட்டை ஏரி, திருவள்ளுவர் நகர், மல்லிகை அவன்யூ, கணேஷ் நகர், துறைமுகம் காலனி, ஜெயந்தி நகர், வீனஸ் நகர் அனைத்து தெருக்கள், பாரத் ராஜீவ்காந்தி நகர் அனைத்து தெருக்கள், அம்மா உணவகம், I.O.C.பெட்ரோல் பங்க், செந்தில் நகர் அனைத்து தெருக்கள், செல்வி நகர் 2வது தெரு, சீனிவாச நகர் 3வது மெயின் ரோடு, டான் போஸ்கோ பள்ளி, ஜானகிராம் ரெட்டி காலனி அனைத்து தெருக்கள், ரங்கதாஸ் ரெட்டி காலனி அனைத்து தெருக்கள், ராஜீவ் காந்தி நகர் அனைத்து தெருக்கள், டி.கே.கல்யாண மண்டபம், தேவர் மீன் மார்க்கெட், மக்காராம் தோட்டம் அனைத்து தெருக்கள், கிரேஸ் சூப்பர் மார்க்கெட், நேதாஜி நகர், அன்னை இந்திரா நகர், ராஜீவ்காந்தி நகர், கோகுல் தெரு, சிலந்திக்குட்டை, பாரதி நகர், அபிராமி நகர், V.V.நகர், G.K.M.காலனி 43வது தெரு முதல் 25வது தெரு வரை சத்தியவாணி முத்து தெரு, அக்பர் ஸ்கொயர் வரையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்,.

உடன் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் இருந்தனர். பிரச்சாரத்தின் தொடக்கத்தில் அருகில் இருந்த காய்கறி கடையில் விற்பனையில் ஈடுபட்டு விற்பனையாளர், வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, அதிமுக கொடியின் நிறங்களான சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களை பறக்கவிட்டு வாக்கு சேகரிக்க தொடங்கினார்.

Tags

Next Story