யாருக்கும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கவில்லை - தனியார் பள்ளி கூட்டமைப்பு
பைல் படம்
FePSA - Federation of Private Schools Associations என்பது தமிழகம் முழுவதும் இயங்கும், 33 மாவட்ட சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஆகும். FEPSA கூட்டமைப்பில் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 தனியார் சுயநிதி நர்சரி - பிரைமரி & மெட்ரிக் & CBSE பள்ளிகள் இயங்கி வருகிறது. அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு வாக்கு அளிக்க போவதாக ஒரு சங்கத்தின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது அதில் உண்மை இல்லை.
ஏனெனில் எங்கள் FePSA கூட்டமைப்பில் உள்ள சுமார் 7,000 பள்ளி தாளாளர்களின் குடும்பங்கள், அதன்கீழ் பணிபுரியும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்களின் குடும்பங்கள் & அதன் கீழ் படிக்கும் சுமார் 30 லட்சத்திற்கு மேற்பட்ட பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் என அனைவருக்கும் FePSA கூட்டமைப்பு, வரும் Parliament Election ல் "வாக்களிக்க எவ்வித அறிவுரையையும் வழங்கவில்லை". தனியார் சுயநிதி பள்ளிகள் சார்ந்த அனைத்து தாளாளர்கள், ஆசிரியர் & பெற்றோர்கள் அனைவரும் "அவரவர் விரும்பும் அரசியல் கட்சிக்கு வாக்களிக்கலாம்" என FePSA திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது. ஆனால், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து அனைவரும் அவரவர் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்குமாறு FePSA கேட்டுக் கொள்கிறது.