நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் வெப்பநிலை பதிவு

நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் வெப்பநிலை பதிவு

கோப்பு படம் 

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8°  செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவியது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 4.5° - 5.0° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் பத்து இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2° செல்சியஸ், சேலத்தியில் 41.26° செல்சியஸ், தருமபுரியில் 41.0° செல்சியஸ் , மதுரை நகரம் மற்றும் விமான நிலையம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர், திருத்தணி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகி யுள்ளது. கடலோரப் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° – 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 8 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 9 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக 10 ஆம் தேதி தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும். ஏப்ரல் 8 முதல் 10 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வெப்ப அலை முன்னெச்சரிக்கையைப் பொறுத்தவரை ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tags

Next Story