வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதலாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு !

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதலாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு !

வேலூர் நாடாளுமன்ற தொகுதி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதலாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 7,31,831 ஆண் வாக்காளர்களும், 7,77,922 பெண் வாக்காளர்களும், 211 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15,09,964 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் சட்டமன்ற தொகுதியில் 243, அணைக்கட்டில் 268, கே.வி.குப்பத்தில் 254, குடியாத்தத்தில் 291, வாணியம்பாடியில் 259, ஆம்பூரில் 234 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.அதன்படி 3 தொகுதிகளிலும் கூடுதலாக தலா 2 வாக்குச்சாவடிகள் என 6 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வழங்கியவுடன் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story