கள்ளகுறிச்சி :மயங்கி விழந்த முதியவர் சாவு

கள்ளகுறிச்சி :மயங்கி விழந்த முதியவர் சாவு

முதியவர் மயங்கி விழுந்து பலியானார் 

அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் பெட்ரோல் பங்க் அருகே 75 வயது மதிக்கதக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story