மேல் வட்டமுத்தாம்பட்டி கிராமத்தில் ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவில்
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சேலம் அருகே மேல் வட்ட முத்தாம்பட்டியில் ஓம் காளியம்மன், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மஜ்ரா கொல்லப்பட்டி கக்குவான் மாரியம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. முதல் கால யாக பூஜையும், கோபுரத்தில் உள்ள மூர்த்திகளுக்கு கண் திறப்பும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், 2-ம் கால யாக பூஜையும் நடந்தது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் செல்வ விநாயகர், ஓம் காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மேல் வட்டமுத்தாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேல்வட்ட முத்தாம்பட்டி ஊர் கவுண்டர்கள், திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story