"ஓம் மகா கணபதியே போற்றி!" - அண்ணாமலை வாழ்த்து

ஓம் மகா கணபதியே போற்றி! - அண்ணாமலை வாழ்த்து

அண்ணாமலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் மகா கணபதியே போற்றி!" இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story