திருத்தணி அருகே ஆம்னி பேருந்து பறிமுதல்

திருத்தணி அருகே ஆம்னி பேருந்து பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட ஆம்னி பேருந்து


ஆம்னி பேருந்து பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி வாகன சோதனையில் அந்த வழியாக சென்ற பேருந்துகள் சோதனைக்கு ஈடுபட்டு வருகின்றனர் சென்னையில் இருந்து வெளிய மாநிலம் தீபாவளி பண்டிகையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் ஆம்னி பேருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஏனெனில் ரயில் மற்றும் பஸ்களில் அதிக கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே வேறு வழியில்லாமல் ஆம்னி பேருந்து களை தேர்வு செய்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக பரவலாக புகார்கள் வரப்பட்டதால் ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

எனவும் வரி செலுத்தாமல் இயக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓ அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் சென்னை வடக்கு இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் போக்குவரத்து அலுவலர் மோகன் திருத்தணி சோதனை சாவடியில் ஒரு ஆம்னி பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுற்றுலா அனுமதி சீட்டில் இயங்கி வந்த ஆம்னி பேருந்து அனுமதிச்சீட்டு நிபந்தனையை மீறி ,

ரெட் பஸ் மற்றும் அபி பஸ் ஆகிய மொபைல் ஆப்புகளின் மூலம் டிக்கெட் புக் செய்து பயணிகளை ஏற்றிச் சென்றது மற்றும் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.இதனையடுத்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டது. இனிவரும் காலங்களிலும் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி ஆம்னி பேருந்துகளின் மீது தொடர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story