தவெக சார்பில் கல்வி விருது விழாவுக்கு பாஸ் வழங்கும் பணி தீவிரம்

தவெக சார்பில் கல்வி விருது விழாவுக்கு பாஸ் வழங்கும் பணி தீவிரம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவுக்காக, மாணவர்கள், பெற்றோர்களுக்கு பாஸ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.  

தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவுக்காக, மாணவர்கள், பெற்றோர்களுக்கு பாஸ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெறுகிறது. முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா ஜூன் 28ல் நடைபெறுகிறது.

இதில் நடிகரும் த.வெ.கா வின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில் விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் என்பது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக உள்ள நிர்வாகிகளை அழைத்து கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வழங்கியுள்ளார்.

Tags

Next Story