வாள் சண்டை போட்டிக்கு ரெடியா நீங்க?

வாள் சண்டை போட்டிக்கு ரெடியா நீங்க?
X

சேலத்தில் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது

சேலத்தில் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது

சேலம் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெரும் மாவட்ட அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30ம் தேதி களரம்பட்டியில் நடக்கிறது. இதில், எப்பி, சேபர், பாயில், போன்ற மூன்று விதமான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் 6ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் 1-1-2007க்கு பின் பிறந்திருக்க வேண்டும். பள்ளி சான்றிதழ், அல்லது ஆதார் கார்டு, பிறந்த தேதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். மாவட்ட தேர்வில் பங்கு பெற இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு வர வேண்டும். என, வாள் சண்டை சங்கத் தலைவர் கோசலம், செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story