அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் கோடி கணக்கில் தங்கம் விற்பனையா?

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் கோடி கணக்கில் தங்கம் விற்பனையா?

நகை கடை

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் கோடி கணக்கில் தங்கம் விற்பனை.

தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்றைய தினம் ரூபாய் 14,000 கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன இன்றும் சில நகைக்கடைகளில் விடிய விடிய விற்பனை நடந்தது.

அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் ரெட்டி பாகம் என்பது ஐதீகம் இறுக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்கலாம் இல்லாதவர்கள் தங்களால் முடிந்த பொருட்களை வாங்கலாம் பலர் நிலம் ,வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்குவது வழக்கம்.

அதுபோல சிலர் கல் உப்பு வாங்கி வைப்பார். இதுவும் லக்ஷ்மி கடாட்சம் தான் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கிறோம். அக்க்ஷய என்றால் குறையாத செல்வம் என்று பொருள் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வளர்ச்சி தங்கும் என்பார்கள்.

தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் எல்லாராலும் தங்கம் வாங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரங்கள் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நேற்றைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இதனால் நேற்று காலை 6 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. இதனால் சவரன் ரூபாய் 54 ஆயிரத்து 1260 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்தது.

இதனால் சவரன் விலை ரூபாய் 53, 250 விற்பனையானது ஒரு கிராம் ₹6660 க்கு விற்பனை செய்யப்பட்டது அதேபோல் இரண்டாவது முறையாக மீண்டும் ரூபாய் 360 உயர்ந்தது. இதனால் சவரனுக்கு ரூபாய் 53, 640க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை ரூபாய் 110க்கு உயர்ந்தது. இது கிராம ஒன்றுக்கு 6770க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 504,160 க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த போதிலும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானது அதாவது 24,000 கிலோ தங்கம் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது.

Tags

Next Story