1 லட்சம் பேர் பங்கேற்கும் செட்டியார் எழுச்சி மாநாடு ; வெள்ளாஞ் செட்டியார் சங்கத் தலைவர் S.P.N சத்தியமூர்த்தி அறிவிப்பு!!

1 லட்சம் பேர் பங்கேற்கும் செட்டியார் எழுச்சி மாநாடு ; வெள்ளாஞ் செட்டியார் சங்கத் தலைவர் S.P.N சத்தியமூர்த்தி அறிவிப்பு!!

மத்திய வெள்ளான் செட்டியார் சங்கத்தின் தலைவர் S.P.N.சத்திய மூர்த்தி

மத்திய வெள்ளாஞ் செட்டியார் நல சங்க முப்பெரும் விழா சென்னை வள்ளுவர் கோட்டம் பார்க் எலன்சா ஹோட்டலில் செட்டியார் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு , சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது

மத்திய வெள்ளாஞ் செட்டியார் நல சங்க முப்பெரும் விழா சென்னை வள்ளுவர் கோட்டம் பார்க் எலன்சா ஹோட்டலில் செட்டியார் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு , சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மத்திய வெள்ளான் செட்டியார் சங்கத்தின் தலைவர் S.P.N.சத்திய மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், வரும் டிசம்பர் 29 ஆம் தேதி அன்று செட்டியார் எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க உள்ளதாகவும், சிதறி கிடக்கும் வெள்ளான் செட்டியார் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளை அதிகரித்து அவர்களை அதிகாரமிக்க பதவியில் அமர்த்த போவதாகவும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குனர் யார் கண்ணனுக்கு விருது வழங்கினார். விழாவில் திமுக வர்த்தக செயலாளர் காசி முத்துமாணிக்கம் கலந்து கொண்டு பேசும் போது சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அதன் வலிமை குறித்து கடை கோடி சமூக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


இந்த முப்பெரும் விழாவில், பூவாளூர் தியாகராஜன் செட்டியார், சங்கத்தின் பொது செயலாளர் புதுக்கோட்டை சத்யராம், ராமுக்கண்ணு, பொருளாளர் கும்பகோணம் வழக்கறிஞர் சுரேஷ் குமார், ஹோட்டல் எலான்சா பார்க் உரிமையாளர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சி.நாராயணசாமி, புலவர் ஜெ.பொன்னம்பலம், கயிலை மணி மு.மாணிக்கம், தலைமை நிலைய செயலாளர் முனைவர் பழனி வாசன், அமைப்பு செயலாளர் ஆதவா செல்வகுமார், இணை பொது செயலாளர் கரூர் ஜெகதீசன், இளைஞர் அணி தலைவர் ந.அ.விஜயகுமார்,


ஊடக பிரிவு தலைவர் நாமக்கல் கிங் டிவி உரிமையாளர் கலையரசு, மகளிர் அணி செயலாளர் மணி பொன்னுசாமி, வழக்கறிஞர் அணி தலைவர் க.அறிவழகன், பிரச்சார குழு செயலாளர் பட்டுக்கோட்டை மா.மனோகரன் மகளிர் அணி துணைச் செயலாளர் நளினி கோபி, பத்மா குணவேல், இந்திரா மனோகர், பரிமலா கந்தசாமி கீதாராணி, நெல்லை சங்க தலைவர் சிதம்பரம் செட்டியார், தேனி சங்க தலைவர் பஞ்சு நாகராஜன், சேலம் சங்க தலைவர் அரிமா பாலாஜி, தேனி மாவட்ட சங்க தலைவர் ராமநாதன், பாப்பாநாடு நகரத்தார் சங்க தலைவர் வைரம் (எ) சாமிக்கண்ணு செட்டியார் ஸ்ரீவில்லி புத்தூர் சங்கத்தின் தலைவர் S.A.Sஅருணாசலம்,


கௌரவத் தலைவர் கோவை டாக்டர் D.J.ரெங்கநாதன், மாவட்ட தலைவர்கள் மத்திய சென்னை R.முருகேசன், தென் சென்னை பொன்னையா, வேலூர் தேவதாஸ், தஞ்சை வடக்கு G.பாரதிதாசன், புதுக்கோட்டை மதி, திருவண்ணாமலை தமிழ்மாறன், காஞ்சி சிவகுமார், நெல்லை சண்முகம், திருச்சி பூண்டு பாலமுருகன், நாகை குரு பொருள் தாசன், சிறகுகள் நிறுவனர் நெல்லை C.R. தமிழ்மணி, துணைத்தலைவர் முத்து செட்டி, சென்னை ரவி ஸ்வீட்ஸ் கருக்கு வேல், 20 கிராம வெள்ளான் செட்டியார் சங்கத்தின் மாநில தலைவர் P.K.V.S.வாசன், 64 மனை செட்டியார்கள் சங்க தலைவர் T.R.T.கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story