ஒரு கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்: நடிகர் விஷால்

ஒரு கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்: நடிகர் விஷால்

நடிகர் விஷால்

அரசியலைப் பொழுது போக்காகவோ அல்லது துறையாகவோ பார்க்காமல் சேவையோடு பார்க்க வேண்டும் என விஜய்க்கு நடிகர் விஷால் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் சென்னையை சேர்ந்த பல்துறை கலைஞரான பார்வதி நாயர் என்பவர் வடிவமைத்த டிரீம் கேச்சர் எனும் கலை வடிவத்தை நடிகர் விஷால் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால். அரசியலைப் பொழுது போக்காகவோ அல்லது துறையாகவோ பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய சேவையோடு பார்க்க வேண்டும் என்ற நடிகர் விஜய்க்கு விஷால் அறிவுரை வழங்கியுள்ளார்.

நற்பணி இயக்கம் தொடங்கும் போது குறிப்பிட்ட நாட்களோ பண்டிகைகளோ இல்லாமல் தொடங்கியது. இப்போது உதவிகளோ சேவைகளோ காதுக்கு வரும்போது கண்டிப்பாக செயல்படக்கூடிய நிலையில் நற்பணி மன்றம் உள்ளது. படப்பிடிப்பு செல்லும்போது மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாததை கேட்கும்போது தர்மசங்கடமாக இருக்கும். அப்படிப்பட்ட மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் போது மன நிறைவாக இருக்கும். நற்பணி மன்றத்தின் முக்கிய வேலையை இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு வழங்குவது அது ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் ஐந்து ஏக்கர், 10 இயக்க நிலம் உள்ளது என்று பெருமைக்காக மட்டுமே சொல்ல முடியும் அதில் வேலை எதுவும் செய்யாமல் சென்னை போன்ற பெரு நகரங்களை தேடி வருகின்றனர். அரசியல் என்பது பொதுப்பணி அது சமூக தேவை , அது துறையல்ல சினிமா துறையை போன்று அரசியல் துறை அல்ல பொழுதுபோக்காக வரக்கூடிய இடம் அரசியல் இல்லை. 2026 தேர்தல் வருகிறது, அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்குபவன் இல்லை இந்த விஷால், அரசியலுக்கு வருவதை காலம் தான் பதில் சொல்லும்.

முன்பெல்லாம் திரையரங்குகளில் ஒரு சினிமா அல்லது இரண்டு சினிமா தான் வரும் ஆனால் இப்போது ஆறு சினிமாக்கள் மல்டிபிளக்ஸ் மூலம் காட்சி அளிக்கப்படுகிறது இது சினிமா துறையின் வளர்ச்சி. என்னுடைய பதவி காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அரசியலுக்கு வருவது குறித்து தகுந்த நேரம் வரும்போது உறுதியாக பதிலை கூறுகிறேன்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தல் தொங்கு பாராளுமன்றமாக இல்லாமல் உறுதியான கூட்டணி வெற்றியைப் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் எந்த கட்சி என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.

Tags

Next Story