தொழிலாளர் நலவாரிவாரியங்களில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

தொழிலாளர் நலவாரிவாரியங்களில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

தொழிலாளர் நலவாரிவாரியங்களில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுசெய்ய, புதுப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பம் பெறலாம்

தமிழக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களையும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம், என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களையும் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றுக்கு உதவித்தொகையும், 60வயது நிறைவடைந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம். பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story