ஊட்டி ரோஜா கண்காட்சி நாளை துவக்கம்

ஊட்டி ரோஜா கண்காட்சி நாளை துவக்கம்

ரோஜா கண்காட்சி

ஊட்டி நூற்றாண்டு ரோஜா பூங்கா நாளை துவங்கவுள்ள 16-வது ரோஜா கண்காட்சிக்காக தீவிரமாக தயாராகிறது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை பொருள் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி என சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை சீஸனின் போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி ஆகிய மூன்று கண்காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நாளை காலை ஊட்டி நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி துவங்க உள்ளது. நாளை துவங்கும் ரோஜா கண்காட்சி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பல ரகங்களில் பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ரோஜா கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு, வரையாடு, பாறு கழுகு உள்ளிட்ட வன விலங்குகளின் அலங்கார வடிவமைப்புகளை அமைக்கும் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோஜா கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு ரோஜா மலர்கள் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags

Next Story