ஊட்டி: புகழ்பெற்ற குதிரை பந்தயம் துவக்கம்

ஊட்டி:  புகழ்பெற்ற குதிரை பந்தயம் துவக்கம்

குதிரை பந்தயம்

ஊட்டியில் நேற்று நடைபெற்ற குதிரை பந்தயத்தில் லைட் தி வேர்ல்ட் குதிரை வெற்றி பெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி‌ (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. புகழ் பெற்ற இந்த குதிரை பந்தயம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக நடத்த முடியாமல் போனது. எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. எனவே இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதியே போட்டியை தொடங்க முடிவு தேவையான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் கடந்து சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இந்த ஆண்டு 137-வது குதிரை பந்தயம் ஊட்டியில் இன்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடந்தன. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. முதல் போட்டியில் ஆல் ஸ்டார் குதிரை ஒரு நிமிடம் 13 நொடிகளில் ஓடி வெற்றி பெற்றது. நீலகிரி முனிசிபாலிட் கோப்பைக்கான தி வெல்கம் டிராபி போட்டியில் 6 குதிரைகள் பங்கேற்றன.

இதில், ஒரு நிமிடம் 13 நொடிகளில் ஓடி லைட் தி வேர்ல்ட் குதிரை வெற்றி பெற்றது. குதிரையின் உரிமையாளருக்கு ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வெற்றி பெற்ற குதிரை பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார். போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதேபோல் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு உற்சாக மூட்டினார். மேலும் செல்போன் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக போட்டிகளில் இந்த குதிரை பந்தயத்தில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் ரூ.7 கோடியே 40 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படுகிறது. ஊட்டியில் குதிரை பந்தயம் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.

Tags

Next Story