வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது

வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது

வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். 

வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

ஈரோடு் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து மரப்பாலம் பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் செய்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தேசத்தின் தலையெழுத்தை நீர்ணிக்கின்ற தேர்தல் இது என்றும் தமிழகத்திற்கு மோடி செய்த துரோங்களை பட்டியலிட முடியும் என்றும் தமிழகத்தின் உரிமைகளை பறித்ததவர் மோடி என்றும் அதற்கு உதவியவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.

கொடுத்த வாக்குறுதிகளை 2.5 ஆண்டுகளில் 80 % நிறைவேற்றியவர் ஸ்டாலின் என்றும் கொடுத்த வாக்குறுதகளை ஒன்றரை கூட நிறைவேற்றாதவர் மோடி என்றார் வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக தெரிவித்த செல்வப்பெருந்தகை , தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது காங்கிரஸ் என்றும் தமிழ் மொழியை அழிக்க நினைப்பது மோடி என்றார் உலகம் முழுவதும் உன்னத திட்டமான காலை உணவுத்திட்டத்தை , தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமல் செயல்படுத்தி காட்டியவர் ஸ்டாலின் என்றும் , திமுக ஆட்சிக்கு வெகுமதி வழங்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈரோடு அதிமுக வேட்பாளரை பாஜகவிலிருந்து அதிமுகவிற்கு டிரான்ஸ்பர் செய்து இருப்பதாகவும் இதிலிருந்தே பா.ஜ.க - அதிமுக கள்ள உறவு தெரிகிறது என்றார்

Tags

Read MoreRead Less
Next Story