வாலாஜாவில் பல்பொருள் அங்காடி மையம் திறப்பு
விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை மூலமாக புதியதாக உருவாகப்பட்ட பல்பொருள் அங்கன்வாடி விற்பனை மையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார்கள்.
தொடர்ந்து பல்பொருள் அங்காடி விற்பனை மையத்தை பார்வையிட்டு மையத்தில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பொருட்களை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, மண்டல இணைப்பதிவாளர் சிவகுமார், சரக துணை பதிவாளர் சந்திரன், பொது விநியோகத் திட்டம் சிவமணி, மேலாண்மை இயக்குநர் அமுதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.