சென்னை துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்லிப்-வே திறப்பு
கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தின் தலைமை தளபதி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல், கடலோர காவல்படையின் மற்ற மூத்த அதிகாரிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்லிப்-வேய்யை திறந்து வைத்தார். இந்திய கடலோர காவல்படை சென்னை துறைமுகத்திடமிருந்து 61000 சதுர மீட்டர் கடல்பரப்பு மற்றும் 48000 சதுர மீட்டர் நிலப்பரப்பு கொண்ட, 27 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஸ்லிப்-வே, கடலோரக் காவல்படையின் பழுதுபார்க்கும் வசதிகளுக்கு ஊக்கமளிக்கும். இது பழுது பணியில் இருக்கும் கப்பல்களை விரைவாக திருப்புவதற்கும், மீண்டும் பொருத்துவதற்கும் வழிவகுக்கும். ஸ்லிப்-வே திறப்பு விழா என்பது கடலோரக் காவல்படையின் நீண்ட கால முயற்சியின் ஒரு பகுதியாகும். அதன் கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்காக உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் மற்ற நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம், எளிய முறையில் கிழக்குப் பிராந்தியத்தில், ரோந்துக்காக கடலோர காவல்படை கப்பல்களை இயக்க முடியும்.