கிளம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ஆலோசனை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு முழுமையாக பேருந்துகள் இயக்குவது தொடர்பாக துறைச் சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை‌ மேற்கொண்டார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து" தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக் கழக பேருந்துகள் (SETC, TNSTC & MTC) முறையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் ஆம்னி பேருந்துகள் இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார், போக்குவரத்துத்துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், மாநகர் போக்குவரத்துக் கழக (MTC) மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) ர, சுதாகர், காவல் துணை ஆணையர்கள் (தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.பவன் குமார், (தாம்பரம் போக்குவரத்து) குமார் , (சென்னை வடக்கு, போக்குவரத்து) குமார் SETC மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story