ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ்..

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகினார். பின்னர் அங்கிருந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்... இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் , புகழேந்தி உள்ளிட்ட ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


