தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!!
Orange alert
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (டிசம்பர் 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையம் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.