தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!!
Orange alert
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தமிழகத்தில் நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் வரும் 25-ந்தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வரும் 26, 27-ந்தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 26, 27-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.