கேரளாவின் சில மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவின் சில மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை

ஆரஞ்ச் எச்சரிக்கை 

வரும் 20 ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழையும் 18, 19 மற்றும் 20 தேதி ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 18ஆம் தேதி மல்லபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வரும் 19ஆம் தேதி இடுக்கி பட்டணம்திட்டா, ஆலப்புழா மாவட்டத்திற்கும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி எர்ணாகுளம் இடுக்கி கோட்டயம், ஆலப்புழா பட்டணம்திட்டா, கொல்லம் திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் மத்திய மற்றும் தென் மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் இன்றிலிருந்து வரும் 20 ஆம் தேதி வரை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story