பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை ஒழிக்க உத்தரவு
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013 ம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனை அதிகரிக்க வேண்டும் என்றும், பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்றும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.