தனியார் பள்ளிபேருந்துகளில் சிசிடிவி, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த உத்தரவு
பைல் படம்
தனியார் பள்ளி பேருந்துகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பு அளிக்க சிசிடிவி, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையில் பாதுகாப்பதற்காக ஜிபிஎஸ், சிசிடிவி கருவிகள் வைப்பதுடன், பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் செல்லும் ஓட்டுநர் உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு போஸ்கோ சட்டம் குறித்தும் பயிற்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனத்தில் ஓட்டுநர் உதவியாளர் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
Next Story