கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணைக்கு அழைக்க உத்தரவு
கேசவ விநாயகம்
தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் காவல் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணைக்கு சென்று திரும்பிய மறுநாளே, மொபைல் போன், சிம் கார்டுகளை ஒப்படைக்கக் கூறி போலீசார் சம்மன் அனுப்பினர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மனுதாரரின் மொபைல் போன் உங்களுக்கு எதற்கு, இது துன்புறுத்துவதற்கு சமம். அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் நீதிபதி காவல்துறைடிடம் கேள்வி எழுப்பினார். துன்புறுத்தும் நோக்கில் செல்போன், சிம் கார்டுகளை சமர்ப்பிக்கும்படி விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இதன் மூலம், விசாரணை அதிகாரி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.