பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்து அரசாணை
கோப்பு படம்
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில்,
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன. இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன. 2024-2025 ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு,
2022-2024 ஆம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய அரசாணை பிப்ரவரி 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார், இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.