ஊட்டியில் படுகர் தின விழா
ஊட்டியில் படுகர் தின விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் நடனமாடி கொண்டாடினர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தனி கலாச்சாரம், தனி பாரம்பரியம் என படுகர் இன மக்கள் வாழ்கின்றனர். படுகர் இன மக்கள் 1989 மே மாதம் 15-ம் முதல் ஆண்டுதோறும் படுகர் தின விழா கொண்டாடி வருகின்றனர். இன்று படுகர் தின விழா ஊட்டியில் உள்ள இளம்படுகர் சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் உட்பட படுகர் இன மக்கள், அவர்களது சமுதாய கொடியேற்றி, பாரம்பரிய நடனமாடினர். சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோர் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்
Next Story