வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பண்ருட்டி நகராட்சி தயார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பண்ருட்டி நகராட்சி தயார்
பண்ருட்டி நகராட்சி தயார் நிலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருத்தில் கொண்டு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ஜேசிபி இயந்திரங்கள், மணல் மூட்டைகள், ஜெனரேட்டர், தண்ணீர் இறைக்கும் மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் அனைத்து தளவாடு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் பானுமதி, கடலூர் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் ஆனந்தி சரவணன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர்கள் கௌரி அன்பழகன், நகர மன்ற உறுப்பினர்கள் அருள், கிருஷ்ணராஜ், பானுமதி பழனிச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story