தேர்தல் பேரத்தில் தேமுதிக vs பாஜக - ஆட்டநாயகன் அன்புமணியா? ஆட்டநாயகி பிரேமலதாவா?
DMDK, BJP, ADMK,
DMDK vs BJP: நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் தருபவர்களுடன் கூட்டணி என்று பாமக மற்றும் தேமுதிக பேரம் பேசி வரும் நிலையில், ஆட்ட நாயகன் அன்புமணியா அல்லது பிரேமலதாவா என்ற விவாதம் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக தனது ஆதரவு கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்க வைத்து கொள்ள முயன்லும் பாஜக தமிழகத்தில் வலுவான கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்க தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறது. ஆனால், இதில் எதிர்பாராதவிதமாக அமுதிக, பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக அண்ணாமலை பெயர் அடிப்படவும் சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். பாஜகவில் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஒருபக்கம் திமுக வலுவான கூட்டணியை அமைத்து வரும் நிலையில், அதே நேரம், அதிமுகவும் தங்களை பலப்படுத்தி கொள்ள தொகுதி பேரம் பேசி வருகிறது. இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக மற்றும் பாமக பேரம் பேசி வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளாரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிக மாவட்ட செயலாளர்கள் விரும்புவதாகவும், ஆனால் 14 மக்களவை, 1 மாநிலங்களை தொகுதிகளை யார் ஒதுக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே கூட்டணி என தெரிவித்தார்.
நாளுக்கு நாள் வாக்குவங்கியை இழந்து பலவீனமான தேமுதிக 14+1 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என பேசி அரசியல் கட்சிகளுக்கு மட்டுமில்லாமல் தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனால், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க இருந்த அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் வாய்த்திறக்காமல் குழப்பத்தில் உள்ளன. ஒரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசும் பிரேமலதா, மறுப்புறம் பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனாலும் பிரேமலதா கேட்டத்தை போல் 14+! ஃபார்முலாவில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது என்றே கூறலாம்.
அதேநேரம், இரு நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு அதிமுகவின் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் அனுப்பபட்டுள்ளார். முதலில் பாமக தரப்பில் அதிமுக கூட்டணியில் இருக்க 9 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், சிவி சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக 6 லோக்சபா தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. முடிவில் 6+1 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்த நிலையில் அதற்கு பாமக கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவுக்காக கதவுகளை திறந்து காத்திருக்கும் பாஜக ஓ. பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரனின் அமமுக, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டோருடன் கூட்டணி அமைக்க ஆதரவு திட்டி வருகிறது. தான் கேட்ட 14+1 ஃபார்முலா தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என்றால் தேமுதிகவின் அடுத்த சாய்ஸ் பாஜக தான்.
இப்படி நடைபெற்று வரும் தேர்தல் சந்தை பேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இதனால், நடைபெற நடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நடைபெற உள்ளது.