நாடாளுமன்றத் தேர்தல் - எம்எல்ஏ தலைமையில் இறுதி பூத் கமிட்டி தேர்வு.

எம்பி தேர்தலில் பணியாற்றுவதற்காக பூத் கமிட்டி தேர்வு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.


எம்பி தேர்தலில் பணியாற்றுவதற்காக பூத் கமிட்டி தேர்வு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாமக்கல் ராணி, தாந்தோனி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயலாளர் தங்கராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூத் கமிட்டியில் 100 வாக்காளர்களுக்கு ஒரு பூத் கமிட்டி பொறுப்பாளர் என்ற அடிப்படையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்தல் களத்தில் தங்களது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தொகுதி, புலியூர் பேரூராட்சி, உப்பிடமங்கலம் பேரூராட்சி, தாந்தோணி கிழக்கு ஒன்றிய தொகுதி, கரூர் மாநகர தெற்கு பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பூத் கமிட்டி தேர்வு ஆலோசனை கூட்டத்தை சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story