நாடாளுமன்றத் தேர்தல்: பொதுமக்களுக்கு செயல்விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல்: பொதுமக்களுக்கு செயல்விளக்கம்

செயல் விளக்கம் அளித்த அதிகாரி

வாக்கு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படும் முறை குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வழங்கிட எந்திரங்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தனி பாதுகாப்பறையில் வைக்கப்பட அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படும் முறை குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வரையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல் விளக்க மையம் அமைக்கப்பட உள்ளது, என்றார். வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்விளக்க மையங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 12 இடங்களில் நாளை மறுநாள் முதல் செயல்பட உள்ளது. என்று கூறினார்.

Tags

Next Story