தீர்த்தகுளத்தில் முதலை லாபகரமாக பிடித்த பொதுமக்கள்

தீர்த்தகுளத்தில் முதலை லாபகரமாக பிடித்த பொதுமக்கள்

ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரம் தீர்த்தகுளத்தில் முதலை லாபகரமாக பொதுமக்கள் பிடித்தனர்.


ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரம் தீர்த்தகுளத்தில் முதலை லாபகரமாக பொதுமக்கள் பிடித்தனர்.

அரியலூர், மே.27- ஜெயங்கொண்டம் அருகே தீர்த்த குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை லாவகரமாக பொதுமக்கள் பிடித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் உள்ளது அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர் மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலை ஒன்று குளத்தில் இருந்து வெளியில் வந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீன்சுருட்டி போலீசார் வனத்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் முதலை மீண்டும் குலத்துக்குள் சென்று விடும் என்பதால் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் முதலையை லாபகரமாக பிடித்து அணைக்கரை வடவாறு பகுதியில் விடப்பட்டது.

Tags

Next Story