மக்களுக்கு என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும்: கதிர் ஆனந்த்
செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த்
மக்களுக்கு என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும் என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டியளித்துள்ளார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," கடந்த ஐந்து ஆண்டில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும். எதிர்கட்சிகள் எங்கள் மீது பொய்யை கூறி வருகிறார்கள்.
எம்பி நிதியிலிருந்து பல திட்டங்களை வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தி உள்ளேன். திமுக கொடுத்த வாக்குறுதிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பேன்," என கூறினார்.
Next Story