தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் 31.05.2024வ் வரை நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் 31.05.2024வ் வரை நீட்டிப்பு

பைல் படம்

வணிகர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் 31.05.2024 வரை சென்னை மாநகராட்சி நீட்டித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு 2024-25ஆம் ஆண்டிற்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் 31.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பருதிகளில் தொழில்புரிவோர் 2024.25ஆம் ஆண்டிற்கான தொழில் உரிமத்தை (Trade License Renewal) புதுப்பிக்கும் காலம் 30.04.2024 வரை கால நீட்டிப்பு செய்த நிலையில் வணிகர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை 31.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை வணிகர்கள் பயன்படுத்தி தொழில் உரிமத்தை 31.05.2024க்குள் புதுப்பித்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story