மழை வௌ்ள காலத்தில் வராத மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்

மழை வௌ்ள காலத்தில் வராத மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்
வாக்கு சேகரிப்பு
மழை வௌ்ள காலத்தின் போது தமிழகத்திற்கு வராத மோடிக்கு ஓரு விரல் புரட்சியின் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்று தூத்துக்குடி பிரச்சாரத்தில் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாத்திமாநகர் ஜங்ஷன் இரண்டம் கேட் போஸ்திடலில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த தலைவா் ஏபிசிவி சண்முகம், மாநகர் மாவட்ட தலைவா் முரளிதரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராஜா, சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 17வது தோ்தலை சந்திக்க இருக்கும் நாம் ஓரு வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்கும் தோ்தல் அதிலும் இந்த தொகுதியில் போட்டியிடும் கனிமொழி கடந்த 5 ஆண்டுகாலம் செய்த சாதனைகள் பட்டியலிட்டு கொண்டே போகலாம். மழைவௌ்ளம் கொரோனா காலக்கட்டத்தில் ஆற்றிய பணிகள் ஏராளம். 2014ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் பெட்ரோல் டிசல் கேஸ் என்ன விலை இருந்தது என்பதை எண்ணி பாருங்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story