காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரதமர் பரப்புரைக்கு தடை விதிக்க கோரி மனு
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் மோடி பரப்புரைக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சார்பில் காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவினர் இரு மாநிலங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர் அணி தலைவர் சந்திரமோகன், மாநில இணைத் தலைவர் நவாஸ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், இதுவரை இருந்த எந்த பிரதமரும் செய்யாத அற்பமான காரியங்களை தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து செய்து வருகிறார். தேசத்தை ஒற்றுமைப்படுத்திய தலைவர்களுக்கு மத்தியில் தேர்தல் வாக்கு வாங்கிக்காக மக்களை மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் பிரிவினையை ஏற்படுத்தி கசப்பு மனப்பான்மையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகிறார். தான் செய்த சிறப்புகளைச் சொல்லி வாக்கு கேட்க துப்பில்லாமல் மக்களை பிளவுபடுத்தி வேற்றுமை அரசியலை பாகுபாடு அரசியலை உருவாக்கி பரப்புரை செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி அவர் செய்வது குற்றம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் வேட்டி சட்டை அணிந்து கபடி வேடதாரியாக தமிழர்களுக்காக உருகி உருகி பேசுகிறார், மற்ற மாநிலங்களில் தமிழர்களை திருடர்களை போல் சித்தரித்து பேசுகிறார். மோடி வாய்க்கு பூட்டு போட வேண்டும் என்று எஞ்சி இருக்கும் தேர்தல் பரப்புரைகளில் அவர் பங்கேற்க கூடாது, என்று உலக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக தேர்தல் அதிகாரி மூலம் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து உள்ளோம். பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள், இந்திய ஒற்றுமைக்கு வங்கம் விளைவுக்கும் வகையில் பேசுவதை காங்கிரஸ் கமிட்டி கண்டிக்கிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம் என்றார்.