மனுநீதி நாள் முகாம்: மாவட்ட ஆட்சியர் தாமதத்தால் பயனாளிகள் தவிப்பு

மனுநீதி நாள் முகாம்: மாவட்ட ஆட்சியர் தாமதத்தால் பயனாளிகள் தவிப்பு

மனுநீதி நாள் முகாம்


செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் திருப்பனங்காடு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் பயனாளிகள் விரக்தியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் திருப்பனங்காடு ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி ஆகியோர் பங்கேற்று மக்கள் நல திட்டங்களை எடுத்து கூறினர். மனு நீதி நாள் முகாமில் 501 மனுக்களை ஏற்றனர். 26 மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு நுண்ணுட்ட சத்துக்கள், கைத்தெளிப்பான், உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் பொது மக்களுக்கு வழங்கினர். காலை 10 மணிக்கு கூட்டம் என அறிவித்து விட்டு 1 மணியளவில் கூட்டம் துவங்கியது. எனவே பொதுமக்கள் 3 மணி நேரமாக காத்திருந்து பட்டா மாறுதல் சான்றிதழ் பெற்று சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story