புனித வெள்ளி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு

புனித வெள்ளி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு

புனித வெள்ளி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு

புனித வெள்ளி அன்று தமிழக முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கத்தோலிக்க அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
கிறிஸ்தவர்கள் தவக்காலமாக 40 நாட்கள் கடைபிடிப்பார்கள் இதில் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழந்த நாளை புனித வெள்ளியாக கிறித்தவ மக்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த ஆண்டு புனித வெள்ளி வரும் 29 3 2004 அன்று கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஒரு நாள் தமிழக முழுவதும் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பரிசுத்த அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை மற்றும் போதை நோய் நல பணி குழு சார்பில் அதன் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆகியோருக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது ஆகையினால் அரசு புனித வெள்ளி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story