மணலி நகருக்கு மெட்ரோ ரயில் சேவை கோரி மனு

மணலி நகருக்கு மெட்ரோ ரயில் சேவை கோரி மனு

மக்கள் கோரிக்கை

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி 10 ஆயிரம் மக்களிடம் கையொப்பம் பெற்று மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது.

1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள் வசித்து வரும் நிலையில் இன்று வரையில் போக்குவரத்து என்பது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவினர் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை தலைமையகத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

துறைமுகங்களில் இருந்து கண்டெய்னர் லாரிகள் அதிகம் சென்று வருவதால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்குழுவினர், எண்ணூர் மாதவரம் மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய இடத்தை மணலி புதுநகர் பெற வேண்டும். மணலி புதுநகர் பகுதியில் அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் இருப்பதாகவும், 1500 க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இயங்கக்கூடிய நிலையில் பேருந்து சேவை முறையாக இல்லாத நிலையில் மெட்ரோ ரயில் சேவையை இணைப்பு சேவையாக வழங்குமாறு, பத்தாயிரம் மக்களிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை மெட்ரோ ரயில் தலைமையகத்தில் அளித்துள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

25 கிராமங்களுக்கு மேல் அந்த பகுதியில் இருப்பதாகவும், 45 ஆண்டுகளாக அங்கு வாழ்கிறோம் வாழ தகுதியான இடம் போக்குவரத்து மட்டும் தான் சிரமமாக உள்ளது, விபத்துகளை தடுக்க வேண்டும் அதனால் தான் மெட்ரோ ரயில் சேவை கேட்கிறோம்.

Tags

Next Story