அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு தள்ளுபடி

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு தள்ளுபடி

அமைச்சர் பெரியசாமி

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டுமனையை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டுமனையை ஒதுக்கீடு செய்தில் முறைகேடு நடந்தாக அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டுமனையை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கிலிருந்து பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இன்று நேரில் ஆஜராகி ஒரு லட்சம் பிணை தொகை செலுத்தவும் பெரியசாமிக்கு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் நேரில் ஆஜராக இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் பெரியசாமி மனு அளித்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு தடை விதிக்காத நிலையில் விசாரணை எப்படி தள்ளி வைக்க முடியும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் கேள்வி எழுப்பினார். குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் பெரியசாமி இன்று நேரில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாதம் அளிக்கவில்லை என்பது குறித்து உயர்நீதிமன்றத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இன்றைய விசாரணைக்கு நேரில் அஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற அமைச்சர் பெரியசாமி மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை ஏப்ரல் 8 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story